September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிடும் அளவில் குறைந்துள்ளனர் – நடிகை திரிஷா

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிடும் அளவில் குறைந்துள்ளர் என்று இந்திய யூனிசெப் நல்லெண்ண தூதர் நடிகை திரிஷா கூறினார்.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் (தீங்கு விளைவிக்கும் என பட்டியலிடப்பட்டுள்ள) வேலைக்கு செல்ல தடை சட்டம் உள்ளது.

இருப்பினும் பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை, வருமை உள்ளிட்ட, அதிகாரிகள் அலட்சியம் பல்வேறு காரணங்கள் இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் படிப்பை தவிர்த்து வேலைக்கு செல்கின்றனர். உலக அளவில் இந்தியாவில் தான் அதிக குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

இந்நிலையில், இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமீபத்தில் யூனிசெப் நல்லெண்ண தூரதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை திரிஷா கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து துவங்கிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில். ‘உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்புதினமான இன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகின்றனர். இதற்காக தொழிலாளர் நலவாரியத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன்’ இவ்வாறு அவர் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news