September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஐபிஎல் வரலாற்றிலே இப்படி ஒரு சாதனையை ரெய்னா மட்டுமே செய்ததுள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகள் பரப்பரான கட்டத்தை எட்டியுள்ளது. டோனி தலைமையிலான சென்னை அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2–வது இடம் வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை 127 ரன்களில் கட்டுப்படுத்தி அசத்தி இருந்தாலும் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் மயிரிழையில் தோற்றது.

ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி அட்டகாரரான நம்ம சின்ன தல ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாத மகத்தான சாதனையை செய்துள்ளார். 11 ஐபிஎல் தொடர்களிலும் 300 ரன்களை கடந்த ஒரே வீரர் சுரேஷ் ரெய்னா மட்டும்தான். ஒரு ஐபிஎல் தொடரில் அவரது குறைந்த பட்ச ஸ்கோர் 374 ஆகும். அவர் 8 முறை 400 ரங்களுக்கு மேல் மற்றும் இரண்டு முறை 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் 400 ரங்களுக்கு மெல் அடிப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஏனெனில் அவர் இதுவரை 313 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 150 கேட்சுகள் பிடித்த ஒரே இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா மட்டுமே. அது மட்டுமில்லாமல் நம்ம சின்னதல ரெய்னா மற்ற அணிகளை விட ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர்களில் முதலிடம் வகிக்கிறார். அவர் இதுவரை மற்ற வீரர்களை காட்டிலும் அதிகமாக 569 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரெய்னா முதலிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அவரை ஐபிஎல் லெஜண்ட் என கூறுகிறார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news