Inandoutcinema - Tamil cinema news

எல்லாத்துறையிலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது – ஹுமா குரேஷி

பிரான்ஸ் நாட்டில் கேன்னஸ் நகரில் 71வது திரைப்பட விழா நடக்கிறது. 1946 ஆம் ஆண்டு முதல் இந்த விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு உலக முழுதும் உள்ள பல திரை பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரபலமான நடிகர் தனுஷ் நடிகை தீபிகா படுகோன் கங்கனா ரனாவத் ஹுமா குரேஷி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு நடிகை  ஹூமா குரேஷி, கருத்து சுதந்திரம் இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் அவரது சொந்த  அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்தியாவிலும்  உலகின் மற்ற இடங்களிலும்   பெண்கள்  துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள்  பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் பேசுவது குறித்து  நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன். சிறுமிகள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு “சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும். பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் உள்ளது என தெரிவித்து உள்ளார். நானும் இதை சந்தித்து உள்ளேன் என்று கூறினார். இந்த விழாவில் நடிகர் தனுஷின் ஹாலிவுட் படமான எஸ்ட்ராடினரி ஜேனி ஆப் பக்கீர் என்ற படம் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news