September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஊனமுற்றோர்க்காக நன்கொடை வழங்கிய சச்சின் டெண்டுல்கர். எவ்வளவு தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டு, கிரிக்கெட் உலகின் கடவுள், லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் ஜாம்பவான், மாஸ்டர் பிளாஸ்டர் என எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர்தான் சச்சின் டெண்டுல்கர். சச்சின் சாதனைகளை என்ன நினைத்தால் கண்டிப்பாக கணிதமேதை தேவைப்படும். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த திங்கட்கிழமை இந்திய சக்கரநாற்காலி கிரிக்கெட் அணிக்காக [ஊனமுற்றோர்] ரூ.4.39 லட்சம் மதிப்பில் சக்கரநாற்காலிகளை நன்கொடையாக அளித்துள்ளார். மேலும் இந்தியா சக்கரநாற்காலி கிரிக்கெட் செயலாளர் பிரதீப் ராஜ் இதைப்பற்றி கூறுகையில் : நான் இந்தியா சக்கரநாற்காலி கிரிக்கெட் வாரியத்திற்காக நன்கொடை வேண்டி சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பினேன்”. அதன் பின் அவர் தேவையான அளவு பணம் நன்கொடையாக வழங்கினார். “நான் அவரை (சச்சின் டெண்டுல்கர்) மின்னஞ்சல் செய்த மூன்று நாட்களுக்கு பிறகு அவருடைய அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டனா் என்றார். பின்னர் அவர்கள் இது தொடர்பான சில கேள்விகளை முன் நிறுத்தினர்கள், இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு சச்சின் எங்களுக்கு பணத்தை நன்கொடையாக அளித்தார். இது உண்மையில் அவரது தரப்பில் இருந்து ஒரு பெரிய உதவியாக கருதப்படுகிறது என் புகழ்ந்தார். ஊனமுற்றோர்க்காக உதவிய சச்சின் டெண்டுல்கரை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news