Inandoutcinema - Tamil cinema news

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைவது உலக கோப்பை மட்டுமே. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு அடுத்த வருடம் இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. உலக கோப்பை போட்டி தொடர் 2019 ஆண்டு மே மாதம் 30–ந்தேதி முதல் ஜூலை 14–ந்தேதி வரை நடக்கிறது.

இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி, ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. தற்போது ஐ.சி.சி, போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அரைஇறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரம எதிரிகளான இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16–ந்தேதி நடக்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா–இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9–ந்தேதி லண்டன் ஓவலில் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14–ந்தேதி நடக்கிறது. ஜூலை 15–ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வருமாறு : தேதி எதிரணி மைதானம் : ஜூன் 5 – தென்ஆப்பிரிக்க, ஜூன் 9 – ஆஸ்திரேலியா, ஜூன் 13 – நியூசிலாந்து, ஜூன் 16 – பாகிஸ்தான், ஜூன் 22 – ஆப்கானிஸ்தான், ஜூன் 27 – வெஸ்ட் இண்டீஸ், ஜூன் 30  -இங்கிலாந்து, ஜூலை 1 – வங்காளதேசம், ஜூலை 6 – இலங்கை ஆகிய அணிகளை சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news