September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

உலகையே கலக்கிய திகில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது!!!

சென்னை:ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்து விடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்ற ஒன் லைனை வைத்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான JULIA’S EYES என்ற ஸ்பானிஷ் படம் உலக அளவில் சினிமா ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்த இப்படம் இந்தியாவில் மிகப் பெரிய வெற்றிபெற்றது.

ஸ்பானிஷில் இந்த படத்தை Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர்லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார்.

இவர், தமிழில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர். தற்போது போல நவீனத்துவம் ஏதும் இல்லாத காலத்திலேயே மைக்கேல் மதன காமராஜன் படத்தில்  நான்கு கமல்ஹாஸங்களை ஒரே நேரத்தில் திரையில் காண்பித்தவர் இந்த  கபீர்லால்.

அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்தரிவாடு, போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் பணியாற்றி இருக்கிறார்.

படம் பற்றி கபீர்லால் பேசும் போது, “மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இந்த படம். இதை இந்தியாவிற்கும் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தமிழிலும் தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்யபோகிறேன். பின்னர் பலமொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.

விரைவில் படப்பணிகள் தொடங்கவுள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news