உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் அணி வெற்றி.!!

உலக கோப்பை கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய இவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news