September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

இயக்குனரான நடிகர்.. முதல் படமே திரில்லர் கதை

சென்னை: இனிது, இனிது மற்றும் மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் நடித்தவர் ஷரண் குமார். இவர்  தற்போது பரத் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரில்லர் படத்தின் மூலம்  இயக்குனராக  அறிமுகமாக இருக்கிறார்.

தான் இயக்குனர் ஆனது பற்றி கூறியபோது; ‘நான் நடிகராக வேண்டும் என ஒரு போதும் நினைத்ததில்லை, இயக்குனராவது தான் என் கனவு. நான் ஒரு விளம்பர பட இயக்குனரிடம் உதவியாளராக சேர முடியுமா? என கேட்க சென்ற அவர்கள் நடிக்க ஆடிஷன் செய்ய சொன்னார்கள். மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு பிறகு, கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆவதன் அவசியத்தை உணர்ந்தேன். அதனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.

திரில்லர் கதை:

தற்போது அதுவே டார்க் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் பரத் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார், ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் அவர் குடும்பத்தை அதிலிருந்து மீட்பது தான் கதை. இது ஒரு நாயகனை மையப்படுத்திய கதை கிடையாது, மாறாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். கதையை கேட்ட உடனே பரத் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். என்றார்.
இப்படத்தில், சென்னை 2 சிங்கப்பூர் படத்தில் நடித்த கோகுல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி தேர்வு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தரண் இசை, ஜாக்சன் துரை, பர்மா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்கிறார். கொடைக்கானலில் வரும் ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க்க இருக்கிறது. கியூ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லக்கி சாஜெர் தயாரிக்கிறார்.
Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news