ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..

நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று ஆர்பிட்டர் 1697 கிலோ எரிபொருளுடன் சென்றது. தற்போது 500 கிலோ எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளது. இருப்பினும் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டாரை பயணிக்க செய்ய முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நிலவின் நீள்வட்ட பாதையில் தொடர்ந்து பயணித்து நிலவு தொடர்பான தகவல்களையும், நிலவு மேற்பரப்பில் தட்பவெப்பநிலை குறித்த தகவல்களையம் பூமிக்கு அனுப்ப உள்ளது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news