ஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். பிரம்மாண்ட வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியும் வெளிநாட்டில் படக்குழு படமாக்கியிருந்தது. இந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் மேஜிக் நிபுணர் பணிபுரிந்த ராமன் சர்மா என்பவர், விஜய் பங்கேற்ற சண்டைக்காட்சிகளில் தனக்கு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பேசும் போது, பின்னணியில் உள்ள தொலைக்காட்சியில் அவர் பணிபுரிந்த மெர்சல் சண்டைக்காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது. வீடியோ வெளியிட்டது மட்டுமன்றி, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடலையும் ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news