அஜித்துக்கு பாராட்டு கூறிய ரஜினி!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‛நேர்கொண்ட பார்வை’. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‛பிங்க்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா கபூர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தபடம், கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், ரஜினிகாந்தும் ‛நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்துள்ளார். அதையடுத்து, அஜித்தை தொடர்பு கொண்டு படம் குறித்தும், அவரது நடிப்பு குறித்தும் பாராட்டியிருக்கிறார். ரஜினியின் பாராட்டு நேர்கொண்ட பார்வை படக்குழுவை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news